fbpx
GeneralRETamil Newsஇந்தியா

நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள்..! கேரள முதல்வர் அறிவிப்பு!

Kerala chief minister pinarayi vijayan announcement over landslide

திருவனந்தபுரம்:

நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்து உள்ளார்.

இடுக்கி மாவட்டம் மூணாறில் உள்ள ராஜமலை பெட்டிமுடி பகுதியில், கடந்த 7ம் தேதியன்று ஏற்பட்ட நிலச்சரிவில், தேயிலை தோட்ட தொழிலாளர்களின் 20 வீடுகள் மண்ணுக்குள் புதைந்து சேதமடைந்தன. விபத்தில் 80 பேர் மண்ணுக்குள் சிக்கினர்.

தற்போது வரை அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந் நிலையில் சம்பவ இடத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிப் அகமது மற்றும் உயரதிகாரிகள் உடன் சென்று நேரில் பார்வையிட்டார்.

தொடர்ந்து வெளியிட்ட பினராயி விஜயன் வெளியிட்ட அறிவிப்பில், மூணாறு நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு நிலம் வழங்கி புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என தெரிவித்துள்ளார். நிலச்சரிவில் இறந்த, உயிரோடு மீட்கப்பட்டோரின் குழந்தைகளது கல்விச் செலை அரசே ஏற்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close