9 நாட்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றார் கெஜ்ரிவால்!!!
புதுடில்லி: கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு துணை நிலைகவர்னர் அனில் பைஜால் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் போராட்டத்தை வாபஸ் பெற்றார் கெஜ்ரிவால் .
தங்கள் உயிருக்கு பாதுகாப்பில்லை என, குற்றஞ்சாட்டி, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பல நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர கோரி துணை நிலை கவர்னர், அனில் பைஜாலை சந்திக்க, முதல்வர் கெஜ்ரிவாலும், பிற அமைச்சர்களும், சமீபத்தில், கவர்னர் மாளிகை சென்று அங்கு 9 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் முதல்வரின் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக துணை நிலை கவர்னர் அனில் பைஜால், நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
அதன்படி கெஜ்ரிவாலுக்கு கடிதம் ஒன்றைஎழுதியுள்ளார். அதில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துமாறு கூறியுள்ளார்.
துணை நிலை கவர்னரின் கடிதத்தினை ஏற்று முதல்வர் கெஜ்ரிவால் தனது போராட்டத்தினை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கடந்த 9 நாட்கள் போராட்டம் முடிவு வரும் என தெரிகிறது.