fbpx
ChennaiGeneralRETamil Newsதமிழ்நாடு

ஒன்றல்ல.. இரண்டல்ல..! ரூ.10.44 கோடி…! வாகன ஓட்டிகளால் வந்த தொகை

Rs.10.44 crore penalty in tamilnadu

சென்னை:

ஊரடங்கை மீறிய இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் இருந்து இது வரை ரூ. 10.44 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக காவல்துறை கூறி இருப்பதாவது: 24 மணி நேரத்தில் மட்டும் 6917 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். ஊரடங்கை மீறியதாக 4,50,479 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2023 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 5,48,842 வழக்குகளும், 24 மணி நேரத்தில் 4276 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.10.44 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

வாகன உரிமையாளர்கள் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 30 நிமிடத்திற்கு ஒரு முறை 10 நபர்களுக்கு என்ற முறை கடைபிடிக்கப்பட்டு வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

வாகனம் பெற வரும்போது எப்ஐஆர் நகல், ஓட்டுனர் உரிமம் அசல் மற்றும் நகல், வாகன ஆர்.சி.புத்தகம் அசல் மற்றும் நகல் கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close