கர்நாடக கனமழை எதிரொலி:மேட்டூர் அணை வேகமாக நிரம்புகிறது.
Karnataka heavy rain echo: Mettur dam fills fast
சேலம் : கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது.
இதனால் தமிழக அரசு காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
124 முழு கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் இதுவரை 75 அடியை எட்டி உள்ளது.
இன்று காலை நேர நிலவரப்படி, அணைக்கு வரும் நீரின் அளவு 37,000 கனஅடியில் இருந்து 38,916 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையின் நீர்மட்டம் 75.36 அடியாகவும், நீர் இருப்பு 37.48 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதே நிலை நீடித்தால் விரைவில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வாய்ப்புள்ளது.
இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.