fbpx
BusinessRETechnology

அசத்தலான Oppo A92S 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ஏ92எஸ் என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது,

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 48எம்பி கேமரா, செயற்கை நுண்ணறிவு அம்சம், சிறப்பான சிப்செட் வசதி என பல்வேறு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது.

தற்சமயம் சீனாவில் மட்டுமே இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது,

விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த சாதனம் விற்பனைக்கு வர உள்ளது.

ஒப்போ ஏ92எஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6.57-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,

1080 x 2400 பிக்சல் டிஸ்ப்ளே மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

மேலும் இதன் திரையில் இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 800 5ஜி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸமார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது..

ஒப்போ ஏ92எக்ஸ் ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது.

கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுகொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஒப்போ ஏ92எக்ஸ் ஸ்மார்ட்போனின் பின்பறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தமாக  நான்கு கேமராக்களுடன் வெளிவந்துள்ளது.

16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது..

ஒப்போ ஏ92எக்ஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இவற்றுள்ள அடக்கம். ஆகவே சார்ஜ் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை.

5 ஜி (எஸ்ஏ / என்எஸ்ஏ)/ இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ் /க்ளோனாஸ் / பீடோஇ யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

மேலும் இந்த சாதனத்தின் இந்திய விலை மதிப்பு தோராயமாக  ரூ.27,000-ஆக உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close