fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாஉலகம்தமிழ்நாடு

ஜூன் 30க்கு பிறகு சில சர்வதேச விமான சேவைகள்..! வெளியான தகவல்!

International flight service may resume june 30th

டெல்லி:

ஜூன் 30க்கு பிறகு சில சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஏர் இந்தியா மற்றும் அமெரிக்காவிலிருந்து சிவில் விமானத் துறைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, முன்பு திட்டமிட்டதை விட சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்குவது விரைவில் நடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏர் இந்தியாவுக்கு அமெரிக்கா 30 நாட்கள் இறுதி எச்சரிக்கை விடுத்து, வந்தே பாரத் மிஷனை நடத்துவதை தடை செய்வதாக அச்சுறுத்தியது. தொடக்கத்தில் சர்வதேச அளவில் பறக்க அனுமதிக்கப்பட்ட ஒரே விமான நிறுவனம் ஏர் இந்தியா மட்டுமே.

எந்தவொரு அமெரிக்க விமான நிறுவனமும் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்காததால், இந்தியர்கள் மட்டுமல்ல, இந்தியாவில் சிக்கித் தவிக்கும் அமெரிக்கர்களும் ஏர் இந்தியா மூலம் சென்றனர். இதுவரை 1,25,000 இந்தியர்கள்  விமானங்களில் நாடு திரும்பி உள்ளனர்.

கிட்டத்தட்ட 43,000 பேர் இந்தியாவுக்கு வெளியே சென்றுள்ளனர். அதற்கான அனுமதி ஜூன் 30க்கு பிறகு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. முதற்கட்டமாக டெல்லி-நியூயார்க், மும்பை-நியூ யார்க் துவக்கப்படலாம் என தெரிகிறது.

அதே போன்று வளைகுடா நாடுகளுக்கு சில தனியார் விமான நிறுவன சேவைகளும் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. ஆனால், அது குறித்த அறிவிப்பு எதையும் மத்திய அரசு வெளியிடாது என்றும் சொல்லப்படுகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close