fbpx
RETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாஉலகம்

ஈரானில் கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு பொருளாதார தடை : அமெரிக்கா மிரட்டல்!!

வாஷிங்டன்;

ஈரான் நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் சீனா, இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா மிரட்டியுள்ளது.

கடந்த மே மாதம் ஈரான் நாட்டுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக் கொண்டது. அதை ஒட்டி ஈரானுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. அதாவது அந்த நாட்டுக்கு அளித்து வரும் நிதி உதவி, வர்த்தக ஒப்பந்தங்கள் ஆகிய அனைத்தையும் அமெரிக்கா நிறுத்தி விட்டது.

ஆயினும் ஐரோப்பிய நாடுகளும், இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளும் தொடர்ந்து ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றன. தற்பொழுது இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெய் ஈராக், சௌதி அரேபியா மற்றும் ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. மே மாதம் ஈரானுக்கு அமெரிக்கா தடை விதித்த போது ஐரோப்பிய நாடுகள் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் வரை தானும் வாங்குவதாக இந்தியா அறிவித்தது.

இந்நிலையில் அமெரிக்கா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “ஈரானுடனான அனத்து வர்த்தக தொடர்புகள் மற்றும் நிதி உதவிகளை அமெரிக்கா ஏற்கனவே முறித்துக் கொண்டுள்ளது. ஈரான் நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் அனைத்து நாடுகளுக்கும் வரும் நவம்பர் வரை கெடு அளிக்கப்பட்டுள்ளது.

அதற்கு மேலும் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டால் அத்தைகைய நாடுகள் அனைத்துக்கும் பொருளாதார தடை விதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி ஆசிய நாடுகளான சீனாவுக்கும் இந்தியாவுக்கும் கூட பொருந்தும் என மிரட்டலான தொனியில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close