வேண்டாம்…. வேண்டவே வேண்டாம்..! முதலமைச்சருக்கு ‘கேட்’ போட்ட ஐசிஎம்ஆர்!
ICMR experts discuss with chief minister edapaddi palanisamy

சென்னை:
தமிழகம் முழுவதும் பொதுப் போக்குவரத்தை அனுமதிக்கக் கூடாது என மருத்துவர் குழு வலியுறுத்தியுள்ளது.
மார்ச் 24ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது மே 31ம் தேதி வரையிலான நான்காவது ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு முடிய இன்னும் ஒரு வாரம் இருக்கிறது.
இந் நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. ஆகையால் மே 31ம் தேதிக்குப் பின்னரும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து ஐசிஎம்ஆர் துணைத் தலைவர் பிரதீப் கவூர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சென்னைத் தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனையில் முக்கியமாக தமிழகம் முழுவதும் கொரோனா முழுவதும் கட்டுக்குள் வரும் வரை பொதுப்போக்குவரத்தை அனுமதிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
சென்னைக்கு எந்த தளர்வும் அறிவிக்கக் கூடாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மருத்துவர்களின் முடிவை தமிழக அரசு ஏற்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.















