ராமர் கோவில் பூஜையில் நான் கலந்துக்கொள்ள மாட்டேன்: உமா பாரதி!
I won't participate in ayodhya boomi pooja: uma bharti

வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் பூஜை நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.க தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் பலர் கலந்துக் கொள்ளவுள்ளனர். கொரோனா தொற்றின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் பா.ஜ.க மூத்த தலைவர் உமா பாரதி தன்னை பட்டியலில் இருந்து நீக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் சில பா.ஜ.க தலைவர்கள் கொரோன தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளதை தொடர்ந்து, அந்த நிகழ்ச்சியில் பாஜக தலைவர்கள் மற்றும் பிரதமர் கலந்துக்கொள்வதை குறித்து நான் மிகவும் கவலை கொள்கிறேன் என கூறியுள்ளார்.
நான் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து அயோத்திக்கு தொடர்வண்டி பயணம் மேற்கொள்ள உள்ளதால் எனக்கு தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்நிலையில் நான் அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டால் பிறருக்கும் தொற்று ஏற்ப்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே அனைவரும் பூமி பூஜை முடிந்து சென்ற பிறகு, நான் அங்கு செல்ல திட்டமிட்டுள்ளேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.















