RETamil Newsதமிழ்நாடு
100-க்கும் மேற்பட்ட வழக்குகள் ஒரே வழக்கானது ,நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அனைத்து வழக்குகளும் ஒரே வழக்காக விசாரிக்க மதுரை உயர்நீதிமன்றம கிளை சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த மே மாதம் 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்பெக்ட்ரம் ஆலைக்கு எதிராக 100-வது நாள் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர் . ஆனால் திடீர் என்று நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டின் காரணமாக பலர் உயிர் இழந்தனர். இந்த சம்பவத்திற்கு எதிராக நூறுக்கும் மேற்ப்பட்ட வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது .
ஆனால் தற்போது மதுரை நீதிமன்ற கிளை பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக விசாரிக்கப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளது.இதை தொடர்ந்து அனைத்து வழக்குகளும் ஒரே வழக்காக விசாரிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.