Tamil News
ரியல் குளோப் ஜாமுன் செய்வது எப்படி.
தேவையான பொருட்கள்:
1. 250 கிராம் மைதா
2. 500 கிராம் இனிப்பில்லா பால்கோவா
3. 500 கிராம் சர்க்கரை
4. பால் (கலக்க தேவையான அளவு )
5. நெய்
6. எண்ணை (வருக்க)
செய்முறை :
முதலில் மைதாவில் பால்கோவாவை உதிரியாக போட்டு , பாலுடன் சேர்த்து நன்கு பிசைக்க வேண்டும்.
அதில் நெய்யை இளஞ்சூடாக்கி ஆறவைத்து போட்டு நன்கு மசிக்கவேண்டும்.10 நிமிடம் அதை ஊறவைக்க வேண்டும்.
அதுவரை சர்க்கரை ஷீரா ரெடி செய்யலாம்.
500 கிராம் சர்க்கரையை 1லிட்டர் திண்ணீரில் போட்டு கம்பி பதம் வரும்வரை சுண்டவைக்கவேண்டும்.பின்னர் அதை நன்கு ஆறவைத்து அதில் பிசைத்த மாவில் சிறு சிறு உருண்டை செய்து எண்ணெயில் பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
பின்னர் வறுத்த குலாப் ஜாமூனை, தயாரித்து வைத்திருந்த சர்க்கரை நீரில் குறைந்தது 2 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.
ஊறியதும் பரிமாறுவதற்கு நம் ரியல் குளோப்ஜாமுன் ரெடி.