fbpx
Others

கடப்பா மக்களவைத் தொகுதியில்ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் Y.S.ஷர்மிளா..

காங்கிரஸ் கட்சியின் 11-வது கட்ட பட்டியலில் ஆந்திராவில் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் கடப்பா மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ஓய்.எஸ்.ஷர்மிளா அறிவிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ம் தேதி முதல் ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்க இருக்கிறது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் 17 பேர் கொண்ட வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.இந்த வேட்பாளர் பட்டியலில் ஒடிசாவில் இருந்து 8 வேட்பாளர்கள், ஆந்திராவில் இருந்து 5 பேர். பீகாரில் இருந்து 3 பேர் மற்றும் மேற்கு வங்காளத்தில் இருந்து ஒருவர் இடம் பெற்றுள்ளனர். இதில், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும் மாநில காங்கிரஸ் கட்சி தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி கடப்பா தொகுதியில் போட்டியிடுகிறார். காக்கிநாடா தொகுதியில் முன்னாள் கல்வி அமைச்சர் எம்.எம்.பள்ளம் ராஜூ போட்டியிடுகிறார்.பீகாரில் உள்ள கிஷன்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவேத்தும், கதிஹார் தொகுதியில் மூத்த தலைவர் தாரிக் அன்வரும், பகல்பூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அஜீத் சர்மாவும் போட்டியிடுகின்றனர். ஒடிசாவின் பர்கர் தொகுதியில் முன்னாள் எம்.பி சஞ்சய் போய் போட்டியிடுகிறார். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 15-ம் தேதி முதல் தொடங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close