fbpx
REதமிழ்நாடு

இந்து மக்கள் கட்சி நிர்வாகி காளிகுமார் கைது!- தான் காருக்கு தானே தீவைத்து பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகமாடியது அம்பலம்

 

 

நேற்று மாலை மீஞ்சூர்- வண்டலூர் சாலையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி ஒருவரின் வாகனம் தீப்பிடித்து எரிந்தது. அந்த வாகனத்தில் பயணம் செய்த இந்து மக்கள் கட்சியின் அனுமந் சிவசேனா அமைப்பின் மாநில செயலாளர் காளிகுமார் மற்றும் கட்சி நிர்வாகி ஞானசேகரன் ஆகியோர் போலீசாரிடம் புகார் ஒன்றை கொடுத்தனர்.

அந்த புகாரில் அவர்கள் சென்றுகொண்டிருந்த வாகனம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினார்கள் என்றும் அதனால் வாகனம் முழுவதும் தீயில் எரிந்தது என்று புகார் அளித்த்னர். இதை அடுத்து அங்கு விரைந்த போலீசார் எரித்துக்கொண்டிருந்த தீயை அணைத்தனர். மேலும் இந்த சம்பவம் பெட்ரோல் குண்டு வீசியதால் நடந்ததா என்ற நோக்கில் போலீசார் ஆய்வு செய்தபொழுது அங்கு பெட்ரோல் குண்டு வீசியதற்கான எந்த தடயமும் இல்லை.

இதை அடுத்து நடத்திய விசாரணையில் ஞானசேகரன் தாங்கள் தான் தனது வாகனத்தில் தீவைத்தோம் என ஒப்புக்கொண்டார். தாங்களே தங்கள் வாகனத்தை கொளுத்திவிட்டு நாடகமாடிய இந்துமக்கள் கட்சியின் அனுமந் சிவசேனா அமைப்பின் மாநில செயலாளர் காளிகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close