RETamil NewsTrending Nowதமிழ்நாடு
மதுரை இனிமே இட்லிக்கு மட்டுமல்ல… இதுக்கும் பேமஸ்..!
High sales in Madurai tasmac

சென்னை: தமிழகத்திலேயே மதுரை மண்டலத்தில் தான் அதிகளவு மது விற்பனையாகி இருக்கிறது.
கிட்டத்தட்ட 40 நாட்களுக்கும் மேலாக காத்திருந்த மதுபிரியர்களுக்கு நேற்று தான் பொன்னாளாக இருந்தது. காரணம் டாஸ்மாக் கடைகள் திறப்பு தான். ஆண், பெண் என பேதமின்றி இஷ்டத்துக்கு மது வாங்கி செல்ல விற்பனை அமோகமாக நடந்தது.
இந்நிலையில் டாஸ்மாக் மூலம் நேற்று எவ்வளவு வசூல் ஆனது என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.172.59 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது.
மாவட்ட வாரியான பட்டியலும் வெளியிடப்பட, ரூ.46.78 கோடி மது விற்பனையுடன் மதுரை முதலிடத்தை பிடித்துள்ளது. இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க, தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை விட டாஸ்மாக் விற்பனைகளில் அதிக கவனம் செலுத்துவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.















