fbpx
REதமிழ்நாடு

வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தாயகம் திரும்ப தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு!!

சென்னை:

வெளிநாட்டில் தங்கியுள்ள தமிழர்களை தாயகம் அழைத்து வர தமிழக அரசு சிறப்பு இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது.

வெளிநாட்டில் இருக்கும் தமிழர்களை மீட்கும் நடவடிக்கையாக தமிழக அரசு சார்பில் இன்று வெளியான அறிக்கை வருமாறு:

இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர்  மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 25 முதல் அமலில்  இருக்கிறது.

இதனால், சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும்  முடக்கப்பட்டுள்ளன.

இதனால், தமிழகத்தை சேர்ந்த பல மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர்  நம் தாய் நாட்டிற்கு வர இயலாத நிலையில் உள்ளனர்.

அவ்வாறு வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களில், உடனடியாக தமிழகத்திற்கு திரும்ப விரும்புகிறவர்களின் நலனுக்காகவும்,

அவர்களது எண்ணிக்கையினை அறியும் வகையிலும், தமிழகத்திற்கு திரும்புகிறவர்களுக்கு தனிமைப்படுத்துதல் வசதிகள் ஏற்படுத்தி தந்திட வசதியாக

அவர்களை பற்றிய தகவல்களை பெறுவதற்காக இணைய பதிவு வசதி புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் கீழ்காணும் இனைய முகவரியில் தங்கள் விவரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளபடுகின்றார்கள்.

வெளிநாடு வாழ் தமிழர்கள் தாயகம் திரும்ப இணையதளம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close