fbpx
GeneralTamil News

பொது அறிவு களஞ்சியம்

1. உலகின் 90 சதவீதம் சுத்தமான தண்ணீர், அன்டார்டிகா கண்டத்தில்தான் உள்ளது.

 

2. உலகில் அதிகம் இரட்டை குழந்தைகள் பிறக்கும் நாடு நைஜீரியா என்கிறது ஓர் ஆய்வு.

3. ஜப்பான் நாட்டில் தான் மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுத பயிற்சி அளிக்கப்படுகிறது.

4. பர்மாவின் இன்றைய பெயர் மியான்மர் என்று அழைக்கப்படுகிறது.

5. காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியீட்ட நாடு போலந்து.

6. உலகிலேயே மிகப்பெரிய நூலகம் அமெரிக்காவில் உள்ளது.

7. உலகின் மிகப்பெரிய தீவு நாடு எது தெரியுமா? கிரீன்லாந்து. இத்தீவின் பரப்பளவு 2,166,086 கிலோமீட்டர்.

8. ஐரோப்பா கண்டத்தில் மட்டும் 200 மொழிகள் பேசப்படுகின்றன.

9. ஆப்பிரிக்கா கண்டம்தான் உலகிலேயே அதிக நாடுகள்கொண்ட கண்டம். மொத்தம் 54 நாடுகள் இந்தக் கண்டத்தில் உள்ளன.

10. காக்கைகள் இல்லாத நாடு என்று நியூஸிலாந்து அழைக்கப்படுகிறது.

11. மஞ்சள் ஆறு என அழைக்கப்படும் ஆறு – ஹோவாங்கோ ஆறு

12. உலகில் மிக அதிகமாக இஸ்லாமியர்கள் வாழும் நாடு – இந்தோனேசியா

13. மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடு – தென்னாப்பிரிக்கா

14. தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் – நெல்சன் மண்டேலா

15. 1966ல், ஐநாவில் பாட அனுமதி பெற்ற முதல் பாடகி – எம். எஸ். சுப்புலட்சுமி

Related Articles

Back to top button
Close
Close