fbpx
BusinessRETamil News

பெட்ரோல் விலை வரலாறு காணாத வீழ்ச்சி!இந்தியாவில் எப்பொழுது!?ராகுல் கேள்வி!!

உலக வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை அதல பாதாளத்துக்கு சென்றுள்ள  நிலையில் பெட்ரோல் விலை இன்னமும் குறைக்காதது குறித்து ராகுல் காந்தி கேள்வி  எழுப்பியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலால் உலகம் முழுவதும் பல நாடுகள் ஊரடங்கை அறிவித்து நாட்டையே முடக்கியுள்ளது.

மக்கள்  வீடுகளியே  முடங்கியுள்ளதால் போக்குவரத்தும் வெகுவாக குறைந்துள்ளது.

இதனால் கச்சா எண்ணெய் விலை உலகளவில் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

ஆனாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த இரண்டு மாதமாக ஒரே விலைக்கே விற்பனையாகி வருகிறது.

இதை குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்து வரும் நிலையில்,

இந்தியாவில்  பெட்ரோல், டீசல் விலையை இன்னமும் குறைக்காமல் இருப்பது ஏன்? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்த பேரிடர் காலத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது விவசாய பொருட்களை கொண்டு செல்வோர், சிறுவியாபாரிகள் உள்ளிட்ட பலருக்கும் நன்மையை தரும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close