fbpx
உலகம்

தென் கொரிய முன்னாள் பிரதமர் கிம் ஜாங் பில்(92) காலமானார்.

சியோல்:

தென் கொரியாவின் முன்னாள் பிரதமர் கிம் ஜாங் பில் முதுமை காரணமாக மரணம் அடைந்தார். அவரது வயது 92. உடலக்குறைவு காரணமாக வீட்டிலேய சிகிச்சை பெற்று வந்த அவர் காலமானதாக தெறிவிக்கப்பட்டுள்ளது.

1926ம் ஆண்டு பிறந்த கிம கொரியா மிலிட்டரி அகாடமியில் படித்து பட்டம் பெற்வர். 1961ம் ஆண்டு நடைபெற்ற அரசுக்கு எதிரான ராணுவ போராட்டத்தின்போது தனது 18 வயதிலேயே முக்கிய பங்காற்றியவர்.

1971-ம் ஆண்டு முதல் 1975-ம் ஆண்டு வரை தென்கொரியாவின் பிரதமராக இருந்தவர் கிம் ஜாங் பில். பின்னர், 1998ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரையிலும் பிரதர் பதவி வகித்துள்ளார். தென்கொரியாவின் உளவுப்பிரிவு தலைவராகவும் இருந்து வந்துள்ளார்.

கடந்த 2004-ம் ஆண்டு அரசியலில் ஓய்வுபெறுவதாக அறிவித்த பில், வீட்டில் இருந்து ஓய்வில்  இருந்தார். முதுமை காரணமாக பல்வேறு நோயின் தாக்குதலுக்கு சிகிச்சை பெற்று வந்த பில் தனது 92வது வயதில் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, அவரை உடனடியாக சியோலில் உள்ள சூன்சுன்யாங் மருத்துவ மனையில் அனுமதிக்க கொண்டு சென்றதாகவும், ஆனால் போகும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Related Articles

Back to top button
Close
Close