ஒரு கடிதத்தை வைத்து அனுதாபம் தேடுவது நமது பிரதமர் மோடியாக மட்டுமே இருக்க முடியும். ; விளாசும் சரத்பவார்!!!

ராஜீவ் கொலை போன்று மற்றொரு நிகழ்ச்சி’ என்று வந்த கடிதத்தை வைத்து பாஜக-வும் மோடியும் மக்களிடம் அனுதாபம் தேட முயல்வதாக தேசியவாத
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் குற்றம்சுமத்தியுள்ளார்.
மகாராஷ்டி மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் நடந்த கோரோகான் போரின் 200-வது ஆண்டு விழா அனுசரிப்பின்போது நடந்த கலவரத்துக்கு காரணமான சிலரை
போலீசார் கைது செய்தனர்.
அப்போது அவர்களது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் ராஜீவ் கொலை போன்று மற்றொரு நிகழ்ச்சி என
குறிப்பிடப்பட்டிருந்தது. கைது செய்யப்பட்டவர்கள் மாவோயிஸ்ட் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்று போலீஸ் கூறியது. இந்த கடிதம் தொடர்பாக மத்திய
உளவுத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், பிரதமரை கொலை செய்வதாக வந்த கடிதம் குறித்து ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஒருவரிடம் நான்
பேசினேன். இதுபோன்ற கடிதங்கள் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்று கூறினார். இந்த ஒரு கடிதத்தை வைத்து பாஜகவும், மோடியும், மக்களிடம்
அனுதாபம் தேட முயல்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்புகாங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் இது தொடர்பாக கூறும்போது, மோடியின் புகழ் சரியும்போதெல்லாம் இத்தகைய
விளம்பரங்களை அவர் தேடிக் கொள்வது வழக்கம். விளம்பர பிரியரான மோடி விளம்பரத்துக்காக எதுவும் செய்வார் என்று விமரிசித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.