GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு
இருட்டுக்கடை அல்வா அதிபர் கொரோனா காரணமாக தற்கொலை..!
Famous Iruttukadai halwa owner harisingh got suicide

நெல்லை:
பிரபலமான இருட்டுக்கடை அல்வா கடை அதிபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருநெல்வேலி டவுனில் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடை உள்ளது. அதன் உரிமையாளர் ஹரிசிங் என்பவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந் நிலையில் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பயத்தில் இருந்த உரிமையாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மற்றொரு உரிமையாளருக்கு தற்போது தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
















