வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி-பாகிஸ்தானில் மாயமான இந்திய தூதரக அதிகாரிகள் விடுவிப்பு!

இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மாயமானதாக கூறப்பட்ட இந்திய தூதரக அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்லாமாபாத்திலுள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் இரண்டு அதிகாரிகள் இன்று காலை முதல் திடீரென மாயமாகியது இந்தியாவில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
பின்னர் சாலை விபத்தை ஏற்படுத்தியதாக இருவரும் கைது செய்யப்பட்டதாகவும் பாதசாரி ஒருவர் இதனால் படுகாயம் அடைந்ததாகவும் பாகிஸ்தான் மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது.
முன்னதாக அதிகாரிகள் மாயமான சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கு இந்திய தரப்பு தகவல் தெரிவித்திருந்தது.
அவர்களை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தது.
இந்நிலையில் இரண்டு அதிகாரிகள் திடீரென மாயமாகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இஸ்லாமாபாத்தில் இந்த இரு அதிகாரிகளும் பயணித்த வாகனம் சாலையை கடந்து சென்றவர்கள் மீது மோதியதை பார்த்ததாக அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இவர்கள் காரை நிறுத்தாமல் சென்றதால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருவருமே கைது செய்திருகின்றனர்.
இவ்வாறு அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையெ இரு இந்திய அதிகாரிகளும் பாகிஸ்தான் போலிசாரால் கைது செய்யப்பட்டது உறுதி படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இருவரும் கைது செய்யப்பட்டு இந்திய அதிகாரிகள் என்று தெரிந்த பின்னர் அபராதம் விதித்து விடுதலை செய்யப்பட்டு விட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
















