நாடாளுமன்ற தேர்தல் மின்னணு இயந்திரம் மூலம் மட்டுமே நடத்தப்படும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாத்தியப்ரதா சாஹு
நாடாளுமன்றத் தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் மட்டுமே நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாத்தியப்ரதா சாஹு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆலோசனை கூட்டமும், மின்னனு வாக்கு பதிவுக்கு குறித்த முதற்கட்ட பயிற்சி வழங்கப்படுவதாக அவர் கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் செப்டம்பர் முதல் தேதியில் வெளியிடப்படும் என்றும் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் 2019 ஜனவரி முதல் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் இந்த முறை மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் மூலம் மட்டுமே தேர்தல் நடத்தப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் நடைபெற்றால் தேர்தலில் முறைகேடு நடக்கும் என பெரும்பாலான மக்கள் அச்சத்தில் உள்ளனர். சமீபத்தில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் மூலம் நடைபெற்ற தேர்தல்களில் முறைகேடுகள் நடைபெற்றது குறிப்பிடதக்கது.