fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

எஸ்எஸ்எல்சி தேர்வு நடக்குமா…?முக்கிய ஆலோசனையில் செங்கோட்டையன்!

Education MInister sengottaiyan discusses about SSLC Exam

சென்னை:

10ம் வகுப்பு தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10ம் வகுப்பு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. மற்ற தேர்வுகளை போல இந்த தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

ஆனால் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தது. அதன்படி, அமைச்சர் செங்கோட்டையன் 10ம் வகுப்பு தேர்வு தேதிகளை அறிவித்தார். வரும் 1ம் தேதி முதல் தேர்வுகள் நடக்க உள்ளது.

இந் நிலையில், 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன்  அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனைக்குப் பிறகு  அமைச்சர் செங்கோட்டையன் முதலமைச்சரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்று முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. ஒரு வேளை தேர்வு தள்ளி வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close