fbpx
HealthRETamil Newsதமிழ்நாடு

தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு – வெளி மார்க்கெட்டிலிருந்து வாங்க அனுமதி

தமிழகம் முழுவதும் 21 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளும், 29 மாவட்ட மருத்துவமனைகளும் மற்றும் 1764 ஆரம்ப சுகாதார நிலையங்களும் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த அனைத்து மருத்துவமனைகளுக்கும் தேவையான அத்தியாவசிய மற்றும் சிறப்பு மருந்துகளை தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகம் கொள்முதல் செய்து விநியோகித்து வருகிறது.

தற்போது தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகத்தில் 33 வகையான அத்தியாவசிய மருந்துகள் இல்லை என்றும், இதனால் அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் நோயாளிகள் சிரமத்துக்குள்ளாவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மருந்துகளின் தட்டுப்பாடு விவரம்;

மனநோய் , குடல் புண் , தைராய்டு , இருதய நோய், கண் தொற்று நோய் , ஆஸ்துமா, எலும்பு பலம் அதிகரிக்க , சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் , இருதய செயல்பாடு அதிகரிக்க மற்றும் பல்வேறு வகையை அண்டிக்பயாடிக் என பல்வேறு நோய்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய மருந்துகளின் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இந்த மருந்து தட்டுப்பாட்டின் கரணம் என்ன ?

மருந்து தட்டுப்பாடு குறித்து மருந்தாளுனர்கள் சங்கத்தினர் கூறியதாவது ;

தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகம் நாட்டிற்க்கு தேவையான அத்தியாவசிய முக்கிய மருந்துகளுக்கு பதிலாக சிறப்பு மருந்தகளை அதிக அளவில் வாங்கி வருகின்றது.இதனால்தான் தமிழகத்தில் அத்தியாவசிய மருந்துகள் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் நோயாளிகளும் அதிக அளவில் சிரமத்துக்குள்ளாகி உகின்றனர்.

மேலும் மருத்துவப்பணிகள் கழகத்தின் இந்த செயலால் ஆண்டிற்கு ரூ.50 லட்சம் முதல் 1 கோடி வரையிலான மருந்துகள் காலாவதியாகி வீணாக்கப்படுகின்றது. எனவே இந்த தட்டுப்பாட்டை குறித்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழக இயக்குனரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

தடையில்லா சான்று;

எனவே இந்த 33 வகையான மருந்துகளின் தட்டுப்பாட்டை போக்க அனைத்து அரசு மருத்துவமனைகளும் அந்த மருந்துகளை தனியாரிடம் இருந்தோ அல்லது வேறு அரசு நிறுவனமிடம் இருந்தோ வாங்கிக்கொள்ள தமிழக அரசு வழிவகை செய்துள்ளது.

இதன் அடிப்படையில் வருகின்ற மே 22-ம் தேதி வரை அணைத்து மருத்துவமனைகளும், தேவைப்படும் அந்த 33 அத்தியாவசிய மருந்துகளை வெளி மார்க்கெட்டிலிருந்து பெற்றுக்கொள்ள தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close