fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நாளை முதல் ரெயில் மூலம் குடிநீர் கொண்டுவர முடிவு – தமிழக அரசு

சென்னையில் பருவ மழை பொய்த்ததால் வரலாறு காணாத அளவில் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் தவித்து வருகின்றனர். தலைநகரான சென்னையில் மக்கள் தொகை அதிக அளவில் உள்ளதால் அங்கு அதிகஅளவில் தண்ணீர் தேவை நிலவி வருகிறது.இந்நிலையில் சென்னை வாசிகளின் தண்ணீர் தேவையை பூர்த்திசெய்ய ஜோலார் பேட்டையிலிருந்து ரெயில் மூலம் தண்ணீர் கொண்டுவர தமிழக அரசு சார்பில் முடிவு எடுக்கப்பட்டது.

 

இந்த உத்தரவின் அடிப்படையில் சென்னைக்கு குடிநீர் கொண்டுசெல்வதற்க்காக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலிருந்து 50 வேகன்கள் கொண்ட சரக்கு ரெயில் நேற்று முன்தினம் காலை ஜோலார்பேட்டைக்கு வந்து சேர்ந்தது.

இந்த ஒவ்வொரு வேகன்களிலும் 2 பணியாளர்கள் வீதம் மொத்தம் 100 பணியாளர்கள் தண்ணீரை ஏற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் அணைத்து பணிகளும் முடிவடைந்ததால் அதற்க்கான சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் குடிநீர் பணிகள் தொடர்பாக முதல் அமைச்சர் பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர் வேலுமணி மற்றும் பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வது பற்றியும் மற்றும் பிற ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த கூட்டத்தை அடுத்து தமிழக அரசு சென்னைக்கு நாளை முதல் ரெயில் மூலம் குடிநீர் கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close