fbpx
RETechnology

கிருமிநாசினியை முதலில் பயன்படுத்தியவர் யார் தெரியுமா ?

Do you know who first used the disinfectant?

கிருமி நாசினி ( antiseptic ) – ஜோசப் லிஸ்டர் (Joseph Lister) :-

 

ஸ்காட்லாந்து நட்டு கிளாஸ்கோ நகர் ஆஸ்பத்திரியில் ஜோசப் லிஸ்டர் என்பவர் 1861-ல் ரண சிகிச்சை (சர்ஜன்) மருத்துவரானார். அந்த சமயத்தில் ஆபரேஷன் செய்து கொண்ட நோயாளிகள் அனைவரும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போனார்கள். சிலருடைய உடலுறுப்புகளை எடுக்க நேரிட்டது. ஏன் இப்படி நடக்கிறது என்று புரியவில்லை. பிரெஞ்சு விஞ்ஞானி லூயி பாஸ்ட்டர் (louis pasteur ) எழுதிய கட்டுரையை லிஸ்டர் படித்தார். அதில் பால் மற்றும் மாமிசம் கெட்டு போவதற்கு காரணம் கிருமிகள் அல்லது பாக்டீரியா என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பாக்டீரியாக்கள் காற்றில் பறக்க கூடிய தன்மை கொண்டவை என குறிப்பிட்டிருந்தது. இவை தான் ஆபரேஷன் செய்யப்பட்ட நோயாளிகளை தாக்குகிறதோ என்று சந்தேகப்பட்டு தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

கிருமிகளை கொன்று நோய் பரவாமல் தடுக்க அவர் ‘கார்பாலிக்’ அமிலத்தை உபயோகித்தார். கிருமி நாசினியை முதலில் பயன்படுத்தியவர் லிஸ்டர் ஆவார். ஆபரேஷன் கருவிகளை இந்த கார்பாலிக் அமிலத்தில் கழுவிய பிறகே ஆபரேஷன் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ஆபரேஷனுக்கு பிறகு தொற்று பரவினால் அந்த புண்ணில் நேரடியாக அமிலத்தை ஊற்றி கிருமிகளை கொள்ள முடியும் என்பதை நிரூபித்தார் லிஸ்டர்.

அந்த ஆஸ்பத்திரியில் அவர் சேர்ந்தபோது ஆபரேஷன் செய்யப்பட்ட நோயாளிகளில் பாதிபேர் இறந்தனர். ஆனால் லிஸ்டர் கண்டுபிடித்த கிருமி நாசினி பயன்பாட்டினால் இறப்பு 15 சதவீதமாக குறைந்தது. இப்போது எந்த மருத்துவரும் தன் கைகளையும், கருவிகளையும் கிருமி நாசினியால் கழுவாமல் ஆபரேஷன் செய்வதில்லை. கிருமிகள் பரவாமல் தடுக்க, வெட்டுக்கள் மற்றும் சிராய்ப்பின் மீது இப்போது நாம் அயோடின் போன்றவற்றை தடவுகிறோம்.

Related Articles

Back to top button
Close
Close