இனி கவலையில்லை மக்களே…! பேருந்துகள் எப்போது ஓடும் தெரியுமா?
Tamilnadu bus transport starts soon

சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் அந்த பகுதிகளில் பேருந்துகள் இயக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் விதிக்கப்பட்ட ஊரடங்கினால் பேருந்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து வசதிகளும் தடை செய்யப்பட்டது. மூன்று கட்ட ஊரடங்கு மே 17ல் முடிகிறது.
நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அந்த ஊரடங்கில் தளர்வுகள் அதிகபடுத்தப்படும் என்பதால் போக்குவரத்துகள் அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்திற்குள் பேருந்துகளை இயக்குவது குறித்து தமிழக போக்குவரத்து கழகம் ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் தற்போது பல மாவட்டங்கள் கொரோனா இல்லாத பச்சை மண்டலங்களாக மாறியுள்ளதால் அங்கு குறைந்த அளவிலாக உள்ளூர் பேருந்து சேவைகளை இயக்கலாமா என்று யோசிக்கப்பட்டு வருகிறது.
ஆரஞ்சு மண்டலங்களில் விதிமுறைகளுடன் குறைவான அளவில் பேருந்துகளை இயக்கவும், சிவப்பு மண்டலங்களில் பாதிப்பு குறையும் வரை முற்றிலும் பேருந்து சேவைகளை இயக்காமல் இருக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.















