துணை முதலமைச்சர் ஓபிஎஸ் நலமுடன் உள்ளார்…! மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
Deputy chief minister ops health condition

சென்னை: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என்று எம்.ஜி.எம். மருத்துவமனை நிர்வாகம் கூறி இருக்கிறது.
தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக துணை முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

இந் நிலையில் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். நேற்று மாலை வந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்று முழு உடல் பரிசோதனை நடந்தது. சிகிச்சை முடிந்து இன்று மாலை ஓ.பன்னீர்செல்வம் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே மருத்துவமனைக்குச் சென்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலன் விசாரித்தார்.















