RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

நம்பிக்கை வாக்கெடுப்பில் மெஜாரிட்டியை நிரூபிக்க எங்களால் முடியும். எடியூரப்பா சூளுரை!!

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிந்தநிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது, அதிக தொதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்ற நிலையில் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்கும்படி ஆளுநர் அழைப்பு விடுத்தார். கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் எடியூரப்பா நேற்று முன்தினம் முதல்வராக பதவியேற்றார். 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி கர்நாடக மாநில சட்டப்பேரவையில் எடியூரப்பா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.இதற்காக சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை கூட்டும்படி ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் இன்று காலை 11 மணிக்கு சட்டசபை கூட இருக்கிறது. முதலில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பார்கள். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் போபையா பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். அதன்பின்னர் அரசு மீதான நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன்மீது மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும். இதன் காரணமாக சட்டசபை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் எடியூரப்பா இன்று விடுதிக்கு வந்தார். அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் வெற்றி பெற போதுமான எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என கூறினார். மேலும், அமைச்சரவையை நாளை கூட்டி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்றும் அவர் உறுதி அளித்தார்.

மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி பெற்றதும், மாலை 5 மணிக்கு பா.ஜ.க. தொண்டர்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாடுவார்கள் என்றும் கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close