ஆளுக்கு ஒரு பாட்டில், வீட்டுக்கு போய் தான் குடிக்கணும்..! இது கடலூர் கலாட்டா..!
Cuddalore tasmac restriction

கடலூர்: கடலூர் டாஸ்மாக் கடைகளில் ஒருவருக்கு ஒரு மது பாட்டில் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. ஆகையால் அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் தரப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக பல இடங்களில் டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை கண்காணிக்க போலீஸார் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அதாவது ஒரு டாஸ்மாக் கடைக்கு, 2 காவலர்கள், 2 ஊர்க்காவல் படையினர் மற்றும் ஒரு தன்னார்வலரும் காவல் பணிகளில் ஈடுபடுவர். கூட்டம் அதிகமுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு காவல் ஆணையர் தலைமையின் கீழான குழு கண்காணிப்பு பணியில் ஈடுபடும்.
இந்நிலையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் புதிய உத்தரவினை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது: கடலூர் டாஸ்மாக் கடைகளில் ஒருவருக்கு ஒரு மது பாட்டில் மட்டுமே வழங்கப்படும். மேலும் கடைகளில் வாங்கும் மதுவை யாரும் பொது இடங்களில் வைத்து அருந்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.















