மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி ‘எஸ்கேப்’..! தேடும் சென்னை போலீஸ்
Corona patient escaped from Chennai hospital

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர் மாயமாகி உள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளன. முக்கியமாக தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்புகள் 2 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்ட 60 வயது முதியவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஏப்ரல் 29ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா தடுப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் நேற்று இரவு யாருக்கும் தெரியாமல் அவர் மருத்துவமனையிலிருந்து தப்பியுள்ளார்.
மருத்துவமனையிலிருது மாயமான அந்த நபரை தேடிப்பிடிக்க சுகாதார துறை அதிகாரிகள் முயன்று வருகின்றனர். அவர்களுடன் போலீசாரும் களத்தில் இறங்கி உள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.















