fbpx
ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு

மே 10 முதல் காய்கறி வாங்க திருமழிசை போகலாம்…! ஓகே சொன்ன சிஎம்டிஏ

CMDA new announcement koyambedu vegetable market

சென்னை: திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை வரும் 10ம் தேதி முதல் செயல்படும் என்று சிஎம்டிஏ அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு 3ம் கட்டமாக மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மருத்துவத்துறை மும்முரமாக இயங்கி வந்தாலும் பாதிப்புகள் குறையவில்லை.

சென்னை மட்டுமல்லாது மற்ற மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு காய்கறி சந்தையுடன் தொடர்பு உள்ளவர்கள் என்பது தெரிய வந்தது. விளைவு…. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது.

அதன் பின்னர் தற்காலிகமாக திருமழிசை பகுதியில் காய்கறி சந்தை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த சந்தை எப்போது செயல்படும் என்பது தெரியாமல் இருந்தது.

இந் நிலையில், கோயம்பேடு சந்தைக்கு மாற்றாக திருமழிசையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தை வரும் 10ம் தேதி முதல் செயல்படும் என்று சிஎம்டிஏ அறிவித்து உள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close