fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

சாத்தான்குளம் மரணம் தொடர்பான சிபிஐ விசாரணை…! ப. சி.யின் பளிச் டுவிட்!

Chidambaram twitter about santhankulam incident

சென்னை:

சாத்தான்குளம் மரணம் தொடர்பான சம்பவத்தில் சிபிஐ விசாரணையை வரவேற்பதாக முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வர்த்தகர்ள் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் இருவரும் காவல்துறை விசாரணையில் அடித்துக் கொல்லப்பட்டார்கள்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று சேலத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார்.

இந் நிலையில் இதுதொடர்பாக ப.சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: தூத்துக்குடியில் காவல் துறையினர் கைது செய்து காவலில் இருக்கும்போது மரணம் அடைந்த இரண்டு வர்த்தகர்களுக்கு (தந்தை, மகன்) நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்பொழுது பிறந்திருக்கிறது.

1996 ஆம் ஆண்டில் டி.கே.பாசு வழக்கில் உச்ச நீதி மன்றம் வகுத்த விதிகளை மத்திய, மாநில காவல் துறைகள் பின்பற்றுவதில்லை என்பதே உண்மை.

சி.பி.ஐ. விசாரணையை விட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை உகந்தது என்பது என் தனிப்பட்ட கருத்து. இருந்தாலும் சி.பி.ஐ. விசாரணையை வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார்.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close