fbpx
ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு

ஜெயலலிதா சொத்துகள்…! தீபக், தீபா ஆகியோர் 2ம் நிலை வாரிசுகள்…! ஐகோர்ட் அதிரடி!

Chennai poes garden property case

சென்னை: ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்கும் வழக்கில் அவரது அண்ணன் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர் 2ம் நிலை வாரிசுகளாக நியமித்து தீர்ப்பு வெளிவந்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி அதிமுகவை சேர்ந்த புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்த ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர், ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு தங்களையே நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் இன்றைக்கு ஒத்திவைத்தனர்.

இதனிடையே, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்குகளின் தீர்ப்பை, நீதிபதிகள் இன்று காணொலி காட்சி வாயிலாக வழங்கினர்.

அதில், ஜெயலலிதாவின் சொத்துகளில் ஒரு பகுதியை அறக்கட்டளை அமைக்க வேண்டும் என்றும் தீபா, தீபக்கை இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்தும் உத்தரவிட்டுள்ளது.  இது பற்றி 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும், உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தொடர்ந்து, போயஸ் இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்ட நீதிமன்றம், வேதா இல்லத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவு இல்லமாக மாற்றி கொள்ள பரிந்துரை வழங்கியுள்ளது.

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமாக ஏன் மாற்ற கூடாது? என்று கேள்வியும் எழுப்பியுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close