செங்கல்பட்டில் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா…! ஒரே நாளில் 144 பேருக்கு தொற்று!
Chengalpattu crosses 4000 corona cases

சென்னை:
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துவிட்டது.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக வரும் 30ம் தேதி வரை இந்த 4 மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
சென்னைக்கு அடுத்து அதிகபட்சமாக மதுரையில் ஒரே நாளில் 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. திருவண்ணாமலையில் 139 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் மொத்த பாதிப்பு ஆயிரத்தை கடந்திருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஜெட் வேகத்தில் அதிகமாகி உள்ளது. அம்மாவட்டத்தில் 4 ஆயிரம் பேருக்கும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று மேலும் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 53 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 1850 பேர் மருத்துவ சிகிச்சையில் இருக்க, ஒட்டுமொத்தமாக 1968 பேர் குணமடைந்து உள்ளனர்.
















