21ம் தேதிக்குள் எல்லாரும் ஸ்கூலுக்கு வந்திருங்க…! டீச்சர்களுக்கு ஆர்டர் போட்ட அரசாங்கம்
School teachers asked to come on 21st may

சென்னை:
பள்ளி ஆசிரியர்கள் வரும் 21ம் தேதிக்குள் தாங்கள் பணிபுரியும் பள்ளிகள் உள்ள மாவட்டங்களுக்கு சென்றுவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமலுக்கு வந்தது. நாளை மறுநாள் அந்த ஊரடங்கு முடிவுக்கு வருகிறது.
முன்னதாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது ஜூன் மாதம் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு கால அட்டவணையும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தேர்வுகளை ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட பின்னர் அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை பாதுகாப்பாக நடத்த தமிழக அரசு தயாராகி வருகிறது.
அதன்படி பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் வரும் 21ம் தேதிக்குள் தாங்கள் பணிபுரியும் பள்ளிகள் உள்ள மாவட்டங்களுக்கு சென்றுவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் தனியார் விடுதிகளில் தங்கி படித்து வரும் மாணவர்களை மூன்று நாட்கள் முன்னதாகவே விடுதிகளுக்கு அழைத்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.















