fbpx
ChennaiRETamil Newsதமிழ்நாடு

பேருந்துகளை இயக்குவது பற்றி தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!

Bus transport may start after May 17

சென்னை: ஊரடங்கு முடிய உள்ள நிலையில் பேருந்துகளை இயக்குவது குறித்து போக்குவரத்து துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. தமிழகத்தில் மே 17ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊரடங்கால் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு, பேருந்து போக்குவரத்தும் முற்றிலுமாக முடங்கியுள்ளது. இந் நிலையில் தமிழக போக்குவரத்து கழகங்களுக்கு, போக்குவரத்து துறை செயலாளர் மூலமாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், தமிழகத்தில் பொது முடக்கம் முடிவடையும் போது 50% பேருந்துகளை இயக்க வேண்டும். ஓட்டுனர், நடத்துனருக்கு முகக்கவசம், கையுறை மற்றும் சானிடைசர் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் பேருந்தில் பயணிகள் 6 அடி இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களை பேருந்துகளில் அனுமதிக்க கூடாது. பயணிகள் நின்று பயணிக்க அனுமதிக்க கூடாது. இருக்கைகளில் இடைவெளி விட்டு எண் குறிப்பிட வேண்டும் போன்ற விதிமுறைகளும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Tags

Related Articles

Back to top button
Close
Close