RETamil Newsஇந்தியா
வங்கி கணக்கு வைத்திருந்தால் மட்டும் போதாது ! அதில் காசும் வைத்திருக்கவேண்டும் ! இல்லையேல் அபராதம்தான் என்று கூறுகிறது வங்கிகள்

வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச வைப்பு தொகையும் வங்கியில் வைக்காமல் இருந்தால் அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும் என்ற கோணத்தில் இதுவரை ரூ.1488 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது .
இது தொடர்பாக நிதித்துறை இணை அமைச்சர் பிரதாப் சுக்லா லோக்சபாவில் தாக்கல் செய்த அறிக்கையில் ,
கடந்த 2017-2018 நிதியாண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஜன்தன் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட வங்கி கணக்கில் குறைந்தபட்ச வைப்பு தொகை இல்லாதவர்களிடமிருந்து அபராத தொகை வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகபட்ச அபராதத்தொகையாக வசூலித்த வங்கி நம் ஸ்டேட் வாங்கி வசூலித்த தொகை ரூ.2,434 கோடியாகும்.
இதே போல் மற்றவங்கிகளும் சேர்ந்து வசூலித்த தொகை ரூ.5,000 கோடியை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.