fbpx
Others

“சனாதன தர்மத்தை தூக்கி எறிந்த பெரியார்”

C. ராஜகோபாலாச்சாரியார் என்னும் மூதறிஞர் இராஜாஜி இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ஆவார்.சென்னை மாகாணபிரதமமந்திரியாகவும் இருந்தார். பின்னாளில் தேசத்தந்தை காந்திஜீக்கு சம்பந்தியாகவும்ஆனார்  இந்திய அரசியலின் சாணக்கியர் என்று கருதப்பட்ட இராஜகோபாலாச்சியார் சேலத்தில் கைதேர்ந்த வழக்குறைஞராகப் பணி புரிந்து வந்தார். திலகர், கோபாலகிருஷ்ண கோகலே, ராமகிருஷ்ண பரமஹம்சர்,விவேகாநந்தர் போன்றோர் செயலால் ஈர்க்கப்பட்டார். பின்னர் தன் வழக்குறைஞர் வேலையைத் துறந்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டார்.இவர் மகளுக்கு இளம் வயதிலேயே திருமணம். நடந்தது. ஆனால் 12 வயதிலேயே கணவர் இறந்து விடுகிறார். பக்கா ஆசாரக்குடும்பமானதால் மொட்டை அடித்து மூலையில் உட்கார வைத்து விடுகிறது ராஜாஜி குடும்பம். ஒருமுறை முன்னறிவிப்பின்றி எதார்த்தமாக பெரியார் ராஜாஜி வீட்டுக்கு சென்றார். இளம் விதவையாக அங்கிருந்த ராஜாஜி மகளை பார்த்து மிகவும் துயருற்றார். ராஜாஜியை அழைத்து அப்பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும் என எடுத்துரைக்கிறார். அந்த சிறுமியிடமும் பேசுகிறார். கவலை ஏதும் கொள்ளாமல் பெண்ணை இயல்பாகவும் சந்தோஷமாகவும் இருக்க அறிவுறுத்துகிறார்.மன சஞ்சலத்துடனேயே அங்கிருந்து புறப்பட்டு் காந்தியிடம் வருகிறார் பெரியார் இந்த தகவலை காந்தியிடம் ஆதங்கத்தோடு சொல்கிறார். அச்சமயம் காந்திஜீயின் மகன் தேவதாஸ் திருமண வயதில் உள்ளார். , ஏற்கெனவே ராஜாஜியும் காந்தியும் உன்னதமான நெருங்கிய நண்பர்களாதலால் பெரியார் தயக்கமின்றி பேசுகிறார்.12 வயதே திரம்பிய அச்சிறுமிக்கு மறுமணம் செய்தால் என்ன என்று கேட்கிறார் பெரியார். காந்தி மறுப்பேதும் சொல்லாமல் சிறிது யோசிக்கிறார். இல்ல என் மகனுக்கு வயது கொஞ்சம் கூடுதலாக உள்ளது . இருந்தாலும் ராஜாஜி் மகளுக்கு மறுவாழ்வு தருவதில் எனக்கும் சம்மதமே என திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார். நெருங்கிய நண்பர்கள் என்பதால் தனது பையன் தேவதாஸ் காந்திக்கு ராஜாஜி யின் மகளை திருமணம் செய்து கொள்வதாக உறுதி கூறுகிறார் காந்திஜீ. அப்போது ராஜாஜி மகளுக்கு வயது 15. தேவதாஸ் வயது 28    5ஆண்டுகள் காத்திருக்க நிபந்தனை விதிக்கிறார்கள் பார்க்கவோ பேசவோ கூடாது என்று. இருவரும் காத்திருந்து கரம் பிடித்தனர். அதன் பின் பெரியார்தான் முன்னின்று திருமணம் செய்து வைக்கிறார்.இவர்கள் மகன்தான் கோபால கிருஷ்ண காந்தி.ஒருமுறை குடியரசு தலைவர் தேர்தலில் கூடநிறுத்தப்பட்டார் இன்று பிராமணர் சமுதாயத்தில் சனாதன தர்மத்தை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு அதிக அளவில் மறுமணம் நடக்க காரணமே பெரியார் தான்.
தத்துவ அறிஞர், பகுத்தறிவுப் பகலவன்என்ற அடைமொழிகள் இவருக்குப் பொருந்தும்தானே??

டி.சசிகலாதேவி
ரவீந்திரதாஸ்.

Related Articles

Back to top button
Close
Close