ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து: ஆளுநர் மாளிகை அறிவிப்பு!
August 15th functions cancelled says raj bhavan

சென்னை:
சென்னையில் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என 84 பேருக்கு, நோய் தொற்று இருப்பது உறுதியானது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது.
அவரை ராஜ்பவனில் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவக்குழு அறிவுறுத்தியது. ஆளுநரின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
சுதந்திர தினம், குடியரசு தினம் அன்று மாலை முதல்வர், நீதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களை உபசரிக்கும் நிகழ்வு நடைபெறும்.
தற்போது, ஆளுநருக்கு ஏற்பட்ட கொரோனா காரணமாக ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த தேநீர் விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து என ஆளுநர் மாளிகையை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















