பசிக்கு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும், ஓ மை கடவுளே!!! டுவீட் போட்ட பிரபல நடிகர்
Actor Vijay sethupathi tweets

சென்னை: பசிக்கு தடுப்பூசி கண்டுபிடியுங்க என்று நடிகர் விஜய் சேதுபதி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில் 3வது கட்டமாக மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் கொரோனா பாதிப்பு குறையவில்லை.
ஊரடங்கால் கொரோனா குறைகிறதோ, இல்லையோ மக்கள் பசியால் வாடி அவதிப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி கலங்க வைக்கின்றன.
இதனை சுட்டிக்காட்டும் விதமாக நடிகர் விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
பசி என்றொரு நோய் இருக்கு. அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும், ஓ மை கடவுளே!!! என பதிவிட்டுள்ளார்.















