fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு..! சென்னை வானிலை மையம் தகவல்!

Rain announcement from chennai weather centre

சென்னை:

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.

வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில், லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் மாலை நேரங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக் கடல், மத்தியகிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.

எனவே  வரும் 20ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close