மானத்தை அடகு வைத்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிறது…!
kamalhaasan tweet

சென்னை:
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தின் 2ம் ஆண்டு நினைவு தினமான இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு நடத்தப்பட்ட போராட்டம் துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது. இந்த சம்பவத்தில்13 பேர் பலியாகி இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
ஊரடங்கு அமலில் உள்ளதால், இன்று தூத்துக்குடியில் இரங்கல் அனுசரிக்க மக்களுக்கு அனுமதி தரப்படவில்லை. இதையடுத்து, பலரும் தமது இரங்கலை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.
இந் நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமது இரங்கலை பதிவிட்டு உள்ளார். இது குறித்து ட்விட்டரில் அவர் கூறி இருப்பதாவது: மக்களின் குரலுக்கு செவி சாய்க்காமல், போர் குற்றவாளிகளைப் போல் சொந்த அரசே எம் மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற தினம் இன்று.
சுவாசிக்க நல்ல காற்றைக் கேட்டவர்களின் மூச்சையே பறித்து, முதலாளியின் வருமானத்தை காக்க, அரசு தன் மானத்தை அடகு வைத்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிறது என்று அரசை விமர்சிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்















