8 வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகளின் நிலத்தை கைப்பற்ற தடை – சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கு ரூ.10, ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த மத்திய மாநில அரசுகள் முடிவு செய்திருந்தன.
இந்த திட்டத்திற்காக விவசாயிகளின் நிலங்கள் கைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஆரம்பகட்ட பணியாக நிலத்தை கைப்படுத்தும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டபோது , அந்த நில விவசாயிகள் பெருமளவில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் விவசாயிகளும் , பலதரப்புபட்டோரும் இந்த 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை ஐகோர்டில் வழக்கு கொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 8 வழிச்சாலை திட்டத்தில் சில மாற்றங்களை செய்து , இந்திய சுற்றுசூழல் அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பி இருக்கிறது.
அதன் அடிப்படையில் 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலத்தினை கைப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக, மத்திய அரசு சென்னை ஐகோர்டிற்கு தெரிவித்துள்ளது.
8 வழிச்சாலை திட்டத்தை மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், திட்டத்தை இறுதி செய்யும் வரை நிலத்தை கைப்படுத்தும் பணியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும் மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதனால் 8 வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகளின் நிலத்தை கைப்பற்ற சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.