fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

இந்தியாவில் ஐந்தரை லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு…! 17 ஆயிரத்தை நெருங்கும் பலி!

6 lakh corona cases India

டெல்லி:

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 66 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருக்கிறது. நேற்று வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 57 ஆயிரத்து 783 ஆக இருந்தது.

24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 18 ஆயிரத்து 522 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. புதியதாக 418 பேர் பலியாகி உள்ளனர். ஆகையால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 66 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

பலியானவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 893  ஆகவும் உயர்ந்து இருக்கிறது. 3 லட்சத்து 34 ஆயிரத்து 822-பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close