கோவையில் 250 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்
கோவை டவுன்வெள் அருகே உள்ள தாமஸ் வீதியில் குட்கா,பான் மசாலா போன்ற போதைப் பொருட்கள் கைப்பற்றப் பட்டுள்ளன.
வணிக வளாகங்கள் அதிகமுள்ள டவுன்வெள் பகுதியில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து வானமேகம் என்பவர் 250 கிலோ குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் குட்கா குடோன் ஒன்று கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கோவையில் நடத்திய சோதனையில் பல்வேறு இடங்களில் குட்கா, பான்மசாலா போன்ற தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
கடந்த 3 மாதத்தில் மட்டும் 5.5 டன் போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இரண்டரை டன் போதைப்பொருட்கள் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த குட்கா பொருட்கள் அனைத்தும் வட மாநிலங்கள் ஆகிய டெல்லி மும்பை போன்ற மாநிலங்களில் இருந்து இங்கு லாரிகள் அல்லது ரயில்கள் மூலம் கொண்டுவரப்படுகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.