fbpx
Others

TAMILAGA GOVERNER….

News.....

நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் கவர்னர் ஆர்.என்.ரவி
மசோதாவை திருப்பி அனுப்பியது குறித்து பிப்.1-ம் தேதி அரசுக்கு விளக்கி உள்ளதாக கவர்னர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை,
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி அரசுக்கே திருப்பி அனுப்பினார்.
திருப்பி அனுப்புவதற்கான காரணங்களை பிப்ரவரி 1-ம் தேதி அரசுக்கு விளக்கி உள்ளதாக கவர்னர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. நீட் விலக்கு மசோதா சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிற்கு மாறாக உள்ளதாக கவர்னர் மாளிகை தமிழக அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது.
* பொருளாதார ரீதியாக பின் தங்கி உள்ள மாணவர்களை நீட் தேர்வு காக்கிறது.
* கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
* சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பக்கோரி கவர்னருக்கு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
* நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரிய மசோதா குறித்து விரிவான விளக்கம் தருமாறு சபாயகருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* நீட் தேர்வு அவசியம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதையும் கவர்னர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார்.
* மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு சபாநாயகருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அறிவுறுத்தி உள்ளார்.
*  நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் அரசியலமைப்புக்கு எதிராக கவர்னர் செயல்பட்டுள்ளார் எனவும்  ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரைகளை கவர்னர் படித்தாரா? என்று தெரியவில்லை என திமுக எம்.பி. வில்சன் கூறியுள்ளார். மேலும் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை கவர்னருக்கே மீண்டும் திருப்பி அனுப்புவோம் என்றார்.
*  நீட் விலக்கு மசோதாவில் குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் கவர்னருக்கு அனுப்ப வேண்டும் எனவும் நீட் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு மூலம் அரசு தீர்வு காண வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close