RETamil NewsTrending Nowதமிழ்நாடு
கையில் டோக்கன்….அப்படியே ஜெராக்ஸ்…!வேலையை காட்டிய குடிகாரர்கள்!
16 arrested for Tasmac token color Xerox

சென்னை:
வாங்கிய உடனேயே டாஸ்மாக் டோக்கனை கலர் ஜெராக்ஸ் போட்டு விற்க முயன்ற 16 பேர் பிடிபட்டனர்.
சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததால் தமிழகத்தில் மதுக் கடைகள் இன்று காலை முதல் திறக்கப்பட்டுள்ளன. கடைகளுக்கு வரும் குடிகாரர்களுக்கு பல கட்டுபாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
கடைகள் திறக்கும் முன்பே காலையிலேயே மதுக்கடைகளில் வந்து குவிந்தனர் குடிகாரர்கள் . அவர்கள் அனைவருக்கும் கிழமை அடிப்படையில் பல நிறங்களில் டோக்கன் வழங்கப்பட்டு உள்ளது.
அதன்படி கடலூரில் டோக்கன் வாங்கிய சிலர் நேராக ஜெராக்ஸ் கடைக்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு அதை ஜெராக்ஸ் எடுத்து விற்க முயன்றுள்ளனர்.
போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று மோசடியில் இறங்கிய 16 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து டோக்கன்களும் சிக்கின.















