fbpx
ChennaiTamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

சென்னையில் கடைகளை திறக்கலாமா..? இன்ப அதிர்ச்சி தந்த தமிழக அரசு

Tn government relaxation for shops

சென்னை: சென்னையில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை அத்யாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

3வது கட்டமாக மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள், விற்பனை செய்யும் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மற்ற தனிக்கடைகள் காலை 10:30 மனி முதல் மாலை 7 மணி வரை செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து தமிழகத்தில் மற்ற பகுதிகளிலும், அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close