fbpx
RETamil Newsதமிழ்நாடு

சென்னையில் இடியுடன் கூடிய, பலத்த காற்றுடன் மழை

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ளதால் , சென்னையில் கடந்த சில நாட்களாகவே இந்த கோடையை முன்னிட்டு கடுமையான வெயிலின் தாக்கம் இருந்தது. தற்போது தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுருக்கும் நிலையில் , பகலில் மக்கள் கூடியவரை வெளியில் செல்லாமல் இருந்தனர்.பல இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் இருந்தது.

அதிக வெப்பநிலையின் காரணமாக சென்னையில் வெப்ப சலனம் ஏற்பட்டு இன்று விடியற்காலை திடீரென கருமையான மேகமூட்டம் கூடி , பலத்த காற்றும் வீசப்பட்டு மழையும் பெய்து வருகிறது.

சென்னை பெரம்பூர், புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி, ஆலந்தூர், கிண்டி, பெரியமேடு, அசோக்நகர், கோடம்பாக்கம், விருகம்பாக்கம் , மற்றும் அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

இதேபோல் சூளைமேடு , ஓ.எம்/ஆர் , நுங்கம்பாக்கம், பாலவாக்கம், சேத்துப்பட்டு கிழக்கு கடற்கரை சாலை போன்ற பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இவ்வாறு சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் காற்றுடன் மழை பெய்து வருகிறது.

முன்னரே சென்னையில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மழை தொடங்கியுள்ளது இது வெயிலின் தாக்கம் சுட்டெரித்துக்கொண்டிருந்த மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close